News April 26, 2025
பெண்கள் உதவி மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

வடசென்னையில் உள்ள பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதுகாப்பாளர் (ரூ.12,000) மற்றும் பன்முக உதவியலாளர் (ரூ.10,000) பணியிடங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் வரும் மே 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 27, 2025
சென்னையில் விமானத்தின் டயர் வெடிப்பு

சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் ஓடுதளத்திலேயே வெடித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, விமானத்தின் டயர் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, பழுதடைந்த டயர் மாற்றப்பட்டு, இரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. இண்டிகோ விமானத்தின் டயர் வெடிப்பு சம்பவம் சென்னையில் பரபரப்பை உருவாக்கியது.
News April 26, 2025
சென்னை “Knights on Night Rounds” விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (26.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 26, 2025
சென்னையின் 100 ஆண்டு பழைய போட்டோக்கள்

சென்னைக்கு நூற்றாண்டு கால வரலாறு உள்ளது. தற்போது இருக்கும் கூட்டம் நிறைந்த சென்னை கடந்த 40 ஆண்டுகளில் உருவானது. உங்களுக்காகவே பழைய சென்னையின் மௌன்ட் ரோடு, ஜார்ஜ் கோட்டை, மெரினா பீச், அடையாறு, பாரிஸ் கார்னர், ரிப்பன் பில்டிங், மயிலாப்பூர் தேரோட்டம், சென்ரல் ஸ்டேசன், தாமஸ் மௌன்ட் ஆகியவற்றின் 100 ஆண்டு பழைய போட்டோக்கள் உள்ளன. ஸ்வைப் பன்னி பாருங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்