News April 26, 2025

தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு நிலவரம்

image

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,310 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 590 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 1,049 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 3,928 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Similar News

News November 5, 2025

தேனி: வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (44). இவரது மகளுக்கு பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக கூறி வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால் (42), அவரது நண்பரான கரூர் முருகேசன் (48) ஆகியோர் 2022-ல் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பெரியகுளம் போலீசார் ராஜகோபால், முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 5, 2025

தேனி: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)

2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)

3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)

4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)

5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

தேனி: 1389 பேரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்

image

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து துறையினர் நேரடியாகவும், போலீசார் பரிந்துரையிலும் ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 10 மாதங்களில் மாவட்டத்தில் 1389 பேரின் ஓட்டுநர் உரிமங்களை 3 முதல் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!