News April 26, 2025

விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்கள் தொழிலாளர் தினமான மே.1 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகள் செயல்பட்டால் மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

விருதுநகர்: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணைமின் நிலையத்தில் இன்று(நவ.4), படிக்காசுவைத்தான்பட்டி, மம்சாபுரம், தொட்டியப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(நவ.5) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT

News November 3, 2025

விருதுநகர் : நாளை மின்தடை பகுதிகள்

image

சேத்தூர் பகுதியில் நாளை (நவ. 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதே போல சிவகாசி பகுதியிலும் நாளை (நவ. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

News November 3, 2025

விருதுநகர்: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <>www.rrbchennai.gov.in<<>> என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.25,500 – ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025 ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!