News April 26, 2025
ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு.. மக்கள் ஏமாற்றம்

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்திற்கு பிப். வரை 1.71 கோடி கிலோ கோதுமையை மத்திய அரசு வழங்கியது. தற்போது அதை 85.76 லட்சம் கிலோவாக குறைத்துள்ளது. இதனால் 1,000 அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளுக்கு கூட வெறும் 300 கிலோ கோதுமையே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோதுமை கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Similar News
News April 27, 2025
பாகிஸ்தானுக்கு பதிலடியா? மக்களுக்கு அரவணைப்பா?

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும் என்று சிலரும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சிலரும் கருத்து கூறுகின்றனர். உங்களது கருத்து என்ன?
News April 27, 2025
ராசி பலன்கள் (27.04.2025)

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – பிரீதி ➤மிதுனம் – செலவு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – அமைதி ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – புகழ் ➤தனுசு – கோபம் ➤மகரம் – ஆதரவு ➤கும்பம் – வீம்பு ➤மீனம் – நன்மை
News April 27, 2025
ஜோகோவிச் தோல்வி

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே அர்னால்டு ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.