News April 26, 2025

தருமபுரி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 6, 2025

தருமபுரி மாவட்டம் – ஓர் பார்வை

image

அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கி தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், நிர்வாக காரணங்கள், 09-02-2004 அன்று மீண்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. ஒகேனக்கல் மற்றும் தீர்த்த மலை ஆகியவை முக்கிய சுற்றுலா தலம். ஷேர்!

News August 6, 2025

தருமபுரியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (9445000908) எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

News August 6, 2025

தருமபுரி: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

image

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <>இணையத்தில் <<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!