News April 26, 2025
சிகரெட்ட விட Danger.. இதனால் 13 வகை கேன்சர் வரலாம்!

சிகரெட், மதுவால், புற்றுநோய் பாதிப்பு வருவது தெரிந்ததே. ஆனால், உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோயை வரும் என்பது தெரியுமா? மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை மற்றும் மெனிங்கியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம். ஆகவே உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள்.
Similar News
News April 27, 2025
அந்தரங்க உறுப்பை கடிக்கும் பெண்… அதிர்ச்சி

உ.பி.,யில் ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சண்டையால் கோபமடைந்த ஒரு பெண், விளையாடிக் கொண்டிருந்த அந்நபரின் 14 வயது மகனின் ஆணுறுப்பை கடித்துள்ளார். உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாலும், அவன் தடிமனான பேன்ட் அணிந்திருந்ததாலும் ஆணுறுப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. சண்டை போட்ட பலரின் அந்தரங்க உறுப்பை இப்பெண் கடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
News April 27, 2025
CSK அணியில் என்ன பிரச்னை?

நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மோசமான அணியாக CSK இடம் பிடித்திருக்கிறது. இந்த தொடர் தோல்விக்கு பொறுப்பேற்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருக்கிறார். ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, வெற்றி பெறும் முனைப்பு இல்லை, தோனி ரிட்டையர் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். உண்மையில், CSK-வின் தோல்விக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
News April 26, 2025
போதை கடத்தல், பஹல்காம் தாக்குதல்… என்ன தொடர்பு?

சமீபத்தில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ₹21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக என்ஐஏ SC-ல் தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருளை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை லஷ்கர்-இ-தொய்பா அரங்கேற்றி வருகிறது, இதன் மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த தீவிரவாத அமைப்பு முயல்வதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.