News April 26, 2025

ஹாலிவுட் பிரபலம் அம்பர் கெல்லெஹெர் காலமானார்!

image

ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை அம்பர் கெல்லெஹெர்(56) காலமானார். இவர் சினைப்பை புற்றுநோயால் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளன. பிரபல சின்னத்திரை தொடர்களான Baywatch, Wings போன்றவற்றில் நடித்துள்ள இவர், அமெரிக்காவின் மிகப்பெரிய மேட்ரிமோனி நிறுவனமான Kelleher International-ன் CEO ஆவார். நம்மூர் கல்யாணமாலை போன்று நிகழ்ச்சிகளையும் ஹாலிவுட்டில் இவர் நடத்தி இருக்கிறார்.#RIP.

Similar News

News January 9, 2026

இணைய சேவை ஈரானில் முடக்கம்

image

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஈரானில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அரசு எதிரான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசு மீது மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

News January 9, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 575
▶குறள்:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
▶பொருள்: கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

News January 9, 2026

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? குஷ்பு

image

90-களில் எப்படி ரஜினி மிகப்பெரிய நடிகராக இருந்தாரோ அதேபோல் இன்று விஜய் ஸ்டாராக உள்ளார் என குஷ்பு தெரிவித்துள்ளார். அதனால் அவரை காண மிகப்பெரிய கூட்டம் கூடுகிறது என்றும், ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக மாறும் என நிச்சயமாக சொல்லமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு, மக்களை ஏமாற்றும் வேலை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!