News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

நாமக்கல்: மோகனூரில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் திருக்கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News July 10, 2025
நாமக்கல்லில் முட்டை 20 காசு குறைவு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டு 5.55 ஆக அறிவிக்கப்பட்டது.
News July 10, 2025
நாமக்கல் மக்களே இந்த லிங்க்கை தொடாதீர்கள்!

நாமக்கல்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News July 10, 2025
2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 10) நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.