News April 26, 2025
ராகு பெயர்ச்சி: தஞ்சையில் செல்ல வேண்டிய தலம்

தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News October 25, 2025
தஞ்சை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 25, 2025
தஞ்சை: மர்மமான முறையில் மாணவர் இறப்பு!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (20). என்ஜினீயரிங் மாணவரான இவர், தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
News October 25, 2025
தஞ்சையில் போலீசார் மீது தாக்குதல் முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் கேட்டு பணியிலிருந்த செவிலியரிடம், செல்வகுமார் (34) என்பவர் தகராறு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை செய்ய வந்த போலீஸ் ஏட்டு ஆனந்தனையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.


