News April 26, 2025

தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு இரட்டை ஆயுள்

image

காரைக்கால்மேடை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய் மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News July 9, 2025

நாகை: 12ம் வகுப்பு போதும்.! கலெக்டர் ஆபீஸில் வேலை!

image

நாகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புற தொடர்பு பணியாளர்க்கான காலி பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.10,592 வரை சம்பளம் வழங்கப்படும். 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இணையதளத்தில் <<>>விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, அதனை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் ஜூலை 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.! இதனை அணைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News July 9, 2025

கடற்கொள்ளையர்களால் விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ வலைகளை வெட்டி அபகரித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்த சம்பவம், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News July 9, 2025

கீழ்வேளூரில் போக்குவரத்து மாற்றம்!

image

கீழ்வேளூர் ரயில்வே பகுதியில் தண்டவாளங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், கீழ்வேளூரில் இருந்து பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி செல்லும் இரு சக்கர வாகனங்கள் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

error: Content is protected !!