News April 26, 2025
நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிநாய்த்தடுப்பபூசி முகாம்

உலக கால்நடைகள் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளிலும் வெறி நோய்த்தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணி முதல் 12 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
நாமக்கல்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT (<<17007667>>தொடர்ச்சி 1/2<<>>)
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
நாமக்கல்: அரசு அலுவலகங்களில் சூப்பர் வேலை வாய்ப்பு!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001739>>CLICK HERE<<>>)