News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News July 9, 2025
சென்னையில் 1002 ரவுடிகள் குண்டாஸில் கைது

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் நேற்று வரை 1,002 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட அலுவலக பிரிவில் பணிபுரிந்து வருவோருக்கு கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார். *ரவுடிகளின் கூடாரமாக உள்ளதா சென்னை?*
News July 9, 2025
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
News July 9, 2025
சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.