News April 26, 2025

போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

image

போப் பிரான்சிஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏப். 21-ம் தேதி மறைந்த அவரது உடலுக்கு இதுவரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் உடலுக்கு காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. இதனையடுத்து, அவருக்கு இறுதி விடை கொடுக்க மத குருக்கள் தயாராகி வருகின்றனர். #RIP

Similar News

News October 23, 2025

வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று 2-வது ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ம் ரொம்ப முக்கியம். இந்த போட்டியில் தோற்றால் சீரிஸை இழந்து விடுவோம் என்பதால் இந்திய அணி முழு திறனையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

News October 23, 2025

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்போம்: IUML

image

திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(IUML) தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு 6 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற IUML 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News October 23, 2025

ஒளியில் தெரிவது தேவதையா! கயாது லோஹர் க்ளிக்ஸ்

image

பார்வையில் ஆளை சாய்க்கும் கயாது லோஹர் தமிழ் ரசிகர்களின் ரிசன்ட் கிரஸாக வலம் வருகிறார். ‘டிராகன்’ படத்தில் இதயத்தை கொள்ளையடித்து சென்ற கயாது லோஹரின் அடுத்த படத்துக்காக பலரும் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என இன்ஸ்டாவில் போட்டோஸை போட்டு ரசிகர்களை தனது விழிகளில் கட்டிப்போடுகிறார். மேலே உள்ள போட்டோஸை பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க..

error: Content is protected !!