News April 26, 2025
போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்

இளையான்குடி அருகே விவசாயி சிவசாமி(45) & தங்கச்சாமி(26). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, தூங்கி கொண்டிருந்த சிவசாமியின் தலை மீது தங்கச்சாமி பெரிய கல்லை போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, (வியாழன்) உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர்.
Similar News
News July 9, 2025
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 12.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும்

திருப்புவனம்: அஜித்குமார் காவல் மரணம் வழக்குடன் அவர் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சிபிஐ காவலர்களையும் சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமித்து விசாரணையை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என (ஜூலை-08) இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
News July 9, 2025
திருப்புவனம் அஜித்குமார், கஸ்டடி (lockup ) மரண வழக்கில் முகாந்திரம்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கஸ்டடி (lockup )-ல் உயிரிழந்த வழக்கில்
நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று (ஜூலை-08) சமர்பித்த அறிக்கையின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.