News April 26, 2025
மயிலாடுதுறை: கூலித்தொழிலாளி தற்கொலை

மணல்மேடு அருகே காருக்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன் (39). சம்பவத்தன்று வேல்முருகன், மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், மன வேதனை அடைந்த வேல்முருகன், தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
மயிலாடுதுறை: குரூப் 4 தேர்வு- ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில் குரூப் 4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் 15,880 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது. கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித சாதனங்களையும் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்; ரயில்வே அறிவிப்பு

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்படவேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என திருச்சி தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News July 9, 2025
குரூப் 4 தேர்வு; ஆட்சியர் அறிவிப்பு

குரூப் 4 பணிக்கான தேர்வு வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15,880 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது, கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித சாதனங்களையும் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.