News April 26, 2025

மாதம் ரூ.1,000 உதவித் தாெகை பெறும் 9.19 லட்சம் மாணவர்கள்

image

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விகளில் சேரும் மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதன்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் எத்தனை மாணவிகள், மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 4,93,689 மாணவிகள், 4,25,346 மாணவர்கள் பயனடைவதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 12, 2026

BREAKING: டெல்லியில் CBI வலை.. விஜய் அதிர்ச்சி

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணிநேரத்திற்கும் மேலாக CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழுவினர் 56 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அளித்திருந்த பதில்களுடன் விஜய் அளிக்கும் பதிலில் ஏதேனும் முரண்பாடாக இருந்தால் அது, விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

News January 12, 2026

திமுக – காங்., கூட்டணியில் மீண்டும் சண்டை வெடித்தது

image

TN-ல் கூட்டணி ஆட்சி இருக்காது, அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி <<>>கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது, ஐ.பெரியசாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் பேசி முடிவு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

உங்கள் சகோதரனாக நான் இருக்கிறேன்: CM ஸ்டாலின்

image

கடலும் நாடுகளும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கின்றன என அயலக தமிழர்கள் தின விழாவில் CM ஸ்டாலின் பேசியுள்ளார். கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகள் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகமே அறிந்துள்ளதாக கூறிய அவர், திமுக அரசு இந்த வரலாற்று கடமையை செய்துகாட்டி இருப்பதாக கூறினார். மேலும், உங்களுக்காக (அயலக தமிழர்களுக்காக) தமிழகத்தில் இந்த சகோதரன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!