News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 17, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (16.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News October 16, 2025
டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர்.பிரதாப் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட சுகாதார அலுவலர்கள், மரு.பிரபாகரன், ஆவடி மாநகராட்சி நல அலுவலர் திருவேற்காடு நகராட்சி நல அலுவலர் (ம) துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
News October 16, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.