News April 26, 2025
சனி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் அனுமன் வழிபாடு

சனி பகவானின் தொல்லையில் இருந்து விடுபட சனிக்கிழமை அனுமன் வழிபாடு மிகவும் உதவும். காலையில் குளித்து அருகில் உள்ள அனுமன் கோயில் அல்லது அனுமன் சன்னதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். அதனைத் தொடர்ந்து, 11 முறை அனுமனின் சன்னதியை, அனுமன் சாலிசாவை சொல்லியபடியே சுற்றி வரவும். பிறகு, துளசி மாலையை அனுமனுக்கு போட்டு, ராம நாமத்தை சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். இது சனி தொல்லையை நீக்கும் என்பது ஐதீகம்.
Similar News
News April 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தஞ்சை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. இதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News April 26, 2025
அமைச்சரின் தொகுதியிலேயே கலப்படம் – பாஜக குற்றச்சாட்டு

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பருப்பில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
News April 26, 2025
பாதுகாப்பு தோல்வியே படுகொலைக்கு காரணம்: சித்தா

நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை, போருக்கான தேவையும் இல்லை என கர்நாடக CM சித்தராமையா கூறியுள்ளார். பாதுகாப்பு தோல்வியே பஹல்காம் சம்பவத்திற்கு காரணம், எனவே பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தைவிட, பிஹார் தேர்தல் பணியே PM-க்கு முக்கியத்துவம் எனவும் விமர்சித்தார்.