News April 26, 2025

துர்நாற்றம் வீசும் கடல் பாசிகள்

image

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் கடந்த ஒருவார காலமாக கடலின் ஆழப் பகுதியில் வாழும் கடல் பாசிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கடற்பாசிகள் கரை ஓரத்தில் குவியல் குவியலாக கிடக்கின்றன. இதனை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

தூத்துக்குடி: காவல்துறை தேர்வுக்கு எஸ்பி அறிவுரை

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைய தினம் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு முன்பு வரவேண்டும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

தூத்துக்குடி: EB பில் அதிகமாக வருகிறதா? இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் செரிவிக்கவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News November 8, 2025

BREAKING: திருச்செந்தூரில் தங்குவதற்கு தடையில்லை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு காவல்துறையினர் தடை விதிப்பதாக வெளியான செய்தி விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!