News April 26, 2025
புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News November 7, 2025
பாஜக அழைப்பு விடுத்தது: செங்கோட்டையன் பரபரப்பு

பாஜக தூண்டிவிடுவதால்தான் போர்க்கொடி தூக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்கவும், கூட்டணிக்காக பேசவும் தான் பாஜக தன்னை அழைத்ததாகவும், தன்னை வைத்து கட்சியை உடைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனவே, பாஜக சொன்னதால்தான் 6 அமைச்சர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பற்றி EPS-யிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
USA Passport-களில் இனி ஆண், பெண் மட்டுமே!

அமெரிக்காவில் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்று, USA Passport-களில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே குறிப்பிட முடியும் என்ற உத்தரவு. இந்நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க USA உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் திருநங்கைகள், மற்றும் பிற பாலின மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
News November 7, 2025
அதிமுகவுடன் கூட்டணிக்காக காத்திருந்தேன்: வைகோ

2011-ல் கூட்டணி விவகாரத்தில் OPS செய்த தவறுக்கு தான், தற்போது அவர் பலனை அனுபவித்து வருவதாக வைகோ விமர்சித்துள்ளார். மதிமுக கூட்டத்தில் பேசிய அவர், 2011-ல் மதிமுகவுக்கு 12 இடங்களை மட்டுமே தருவதாக இருந்த போதும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணிக்கு தயாராக இல்லை என்று OPS பொய் சொல்லிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


