News April 4, 2024
₹680க்கு வருமான வரி செலுத்திய மத்திய அமைச்சர்

கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ரூ.680-க்கு மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிடும் அவர் தனது வேட்புமனுவில், ‘2018-19இல் ஆண்டு வருமானம் ரூ.10.8 கோடி, 2019-20இல் ரூ.4.5 கோடி, 2020-21இல் ரூ.17.5 லட்சம், 2021-22இல் ரூ.680, 2022-23இல் ரூ.5.6 லட்சம்’ என படிப்படியாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 10, 2026
இந்தியா – பாக்., ஆட்டத்துக்கு வெயிட்டிங்: இலங்கை அதிபர்

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் <<19097730>>ஒப்புக்கொண்டதற்கு <<>>இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற உள்ள இந்தியா – பாக்., ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும், இதை சாத்தியப்படுத்திய ICC-க்கு நன்றி எனவும் கூறியுள்ளார். 1996 WC-ல் பாதுகாப்பு காரணங்களால் மற்ற அணிகள் விளையாடாத போது, இந்தியா- பாக்., மட்டும் கொழும்பில் விளையாடியதை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
விஜய் முதல்ல இத சொல்லட்டும்: CPI

விஜய்யுடன் சேர்ந்திருப்பவர்கள் புதுச்சிந்தனை உள்ளவர்களா என CPI வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப்போர் காலங்களில் முன்னோர்கள் கனவு கண்ட சமூகம் நமக்கு தேவை என்ற அவர், அதுபற்றிய சிந்தனை விஜய்யிடம் எதாவது இருக்கிறாதா எனவும் கேட்டுள்ளார். மேலும், உலகம் முழுவதும் வலது, இடது என இரு கொள்கைதான் இருக்கிறது எனவும் அதில் விஜய் எந்த பக்கம் என்பதை அவர் முதலில் சொல்லட்டும் என்றும் கூறியுள்ளார்.
News February 10, 2026
என்ன HairCut பண்ணனும் தெரியலயா? APP கிட்ட கேளுங்க

உங்கள் முகத்துக்கு எந்த மாதிரியான Hairstyle எடுப்பாக இருக்கும் என தெரியவில்லையா? அந்த பிரச்னையை சரி செய்ய ஒரு செயலி இருக்கிறது. Playstore-ல் உள்ள ‘HiFace’ (அ) Hairstyle Try On ஆகிய செயலிகளின் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்து, அதில் செல்ஃபியை அப்லோடு செய்தால் போதும். முகத்திற்கு ஏற்ற Beard Style, Hairstyle, Sunglasses-ஐ அதுவே பரிந்துரைக்கும். இது சொல்வதை போல நீங்கள் Try செய்து பாருங்கள். SHARE.


