News April 25, 2025
ரூ.1000 உரிமைத் தொகை: CM ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முகாம்களில், பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
Similar News
News January 12, 2026
கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் TN சிறப்பாக இருக்கும்: பிரவீன்

மற்ற மாநிலங்கள் காங்., உடன் கூட்டணி ஆட்சியை ஏற்கும்போது, TN-ல் மட்டும் அந்த மனநிலை இல்லாதது ஏன் என பிரவீன் சக்கரவர்த்தி கேட்டுள்ளார். 60 ஆண்டுகளாக TN-ல் காங்., பலவீனமடைந்துவிட்டதாக கூறிய அவர், அதை பலப்படுத்த சில கோரிக்கைகளை வைப்பதில் தவறில்லை என்றும் கூறினார். மேலும், கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதார சூழ்நிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
கவனம் குறைந்த பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்!

சின்ன டைம் டிராவல் பண்ணுவோம். 15 ஆண்டுகளுக்கு முன், பொங்கல் அன்று அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, குடும்பமே டிவி முன் அமர்வோம். ஏதோ ஒரு சேனலில் போடப்படும் புதுப் படத்தை ஒன்றாக பார்த்து மகிழ்வோம். ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. OTT, யூடியூப் அனைத்தையும் மாற்றிவிட்டன. பொங்கல் சிறப்பு திரைப்படங்களை பார்க்க ஆர்வமே இல்லாமல் போய்விட்டது. நீங்க பொங்கல் அன்று டிவியில் பார்த்து ரசித்த படம் எது?
News January 12, 2026
ரயில்வேயில் வேலை.. ₹45,000 வரை சம்பளம்

இந்திய ரயில்வேயில் வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர், அறிவியல் உதவியாளர், ஆய்வக உதவியாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பதவிகளில் 312 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹44,900 வரை. வயது வரம்பு: 18- 40 வரை இருக்கலாம். தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க இங்கே <


