News April 25, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வரும் மே10ம் தேதி பாவந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

Similar News

News August 25, 2025

க.குறிச்சி: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 25, 2025

திருக்கோவிலூர் வருகை தரும் அமைச்சர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு அருகில் நாளை (26-08-2025) மாலை 5 மணியளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மு.எம்.பி பொன்.கௌதம் சிகாமணி தலைமையில் அண்ணா அறிவகம் (District பிரிவால்) அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சரும் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க‌.பொன்முடி கலந்து கொள்ள உள்ளார்.

News August 25, 2025

கள்ளக்குறிச்சி: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்படலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!