News April 25, 2025

டிடிவி தினகரன் மீதான வழக்கு ரத்து

image

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. அதிமுக முன்னாள் MP உதயகுமார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக MP தங்க தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Similar News

News September 13, 2025

BCCI-க்கு வலுக்கும் கண்டனம்

image

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட வடு இன்னும் மறையாத நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என்றும் பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமா எனவும் BCCI-க்கு SM-ல் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, மத்திய அரசு அனுமதித்ததால் பாக். உடன் விளையாடுவதாக BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

image

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துகுரியவன் ; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும். *விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு. *சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். *கண்டனத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

News September 13, 2025

“புதிய காரை தவெக கொடுத்திட்டாங்க”

image

தவெக மாநாட்டில் கொடிக்கம்பம் விழுந்து உடைந்த தன்னுடைய காருக்கு மாற்று கார் வழங்கப்பட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தவெக தலைமை சொன்னபடி புதிய கார் கொடுக்காததால் அதன் உரிமையாளர் தினேஷ்குமாரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதை மறுத்துள்ள தினேஷ்குமார், கட்சி தரப்பில் தனக்கு புதிய கார் தந்துவிட்டதாகவும், அதை விஜய்யின் கையில் வாங்குவதற்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

error: Content is protected !!