News April 25, 2025

போப் ஆண்டவர் உடலுக்கு திருச்சி எம்.எல்.ஏ அஞ்சலி

image

உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 22-ம் தேதி காலமானார். தொடர்ந்து வாடிகனில் நடைபெற்ற இவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் இன்று கலந்து கொண்டு, மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News August 19, 2025

திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <<17454239>>பாகம் 2<<>>ஐ பார்க்கவும். SHARE NOW!

News August 19, 2025

திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 19, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

image

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!