News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News December 19, 2025
மீண்டும் களமிறங்கிய ஸ்டாலின்!

‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சி மூலம் திமுக நிர்வாகிகள் சந்திப்பை ஸ்டாலின் மீண்டும் தொடங்கியுள்ளார். இதுவரை, 49 நாள்களில் 112 தொகுதி நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், இன்று(டிச.19) அரக்கோணம், சோளிங்கர், கலசப்பாக்கம் தொகுதி நிர்வாகிகளுடன் ‘One to One’ ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணி, மக்களின் மனநிலை, எதிர்பார்ப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
News December 19, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. தமிழக அரசின் திட்டம்

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த TWEES(TN Women Entrepreneurs Empowerment Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரேஷன் கார்டு உள்ள 18-55 வயது பெண்கள் வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு 25% மானியத்துடன் ₹2 – ₹10 லட்சம் வரை கடன் பெறலாம். கல்வித் தகுதி நிபந்தனை எதுவும் இல்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு <
News December 19, 2025
மக்களே ரெடியா? வருகிறது குறைந்த கட்டண டாக்ஸி!

கார் டாக்ஸி சேவையில் ஊபர், ஓலா, ராபிடோ ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்திய அரசின் ஆதரவுடன் களமிறங்குகிறது பாரத் டாக்ஸி. வரும் 1-ம் தேதி முதல் டெல்லியில் இதன் சேவை தொடங்கப்பட உள்ளது. ஓலா, ஊபர் சேவைகளில் தற்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு குறைந்த கட்டண சேவை, ஓட்டுநர்களுக்கு வருவாயில் 80% வழங்கப்படும் என பாரத் டாக்ஸி தெரிவித்துள்ளது. SHARE IT.


