News April 25, 2025
சேலம் மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 26, 2025
பெரியார் பல்கலையில் விண்ணப்பிக்க தயாரா!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தருமபுரி ஆகியவற்றில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கைக்காக, பெரியார் பல்கலைக்கழக இணையதளமான<
News April 26, 2025
சேலம் பட்டாசு விபத்து CM இரங்கல்!

சேலம்: காடையாம்பட்டி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் 2 சிறுவர் உள்பட 4 பேர் எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
News April 26, 2025
விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

“தென்னை மற்றும் பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட வேளாண்மைத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோடைகாலம் என்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெறுவதற்கு சொட்டுநீர் பாசனம் திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!