News April 25, 2025
திருச்சி விமான நிலையத்தில் 9.9 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல்

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
திருச்சி: திருமணம் நடக்க சிறப்பு வழிபாடு

லால்குடி அருகே அரியூரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மாலையுடன் சென்று, இத்திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE!
News September 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியீடு

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என கழகத் தொண்டர்களை வழிநடத்தி, இந்தியாவிலேயே முதல் மாநில கட்சியாக திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. திராவிடத்தின் அணையா விளக்கு பேரறிஞர் அண்ணாவை போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.