News April 25, 2025

நாட்டை தலைநிமிரச் செய்தவர்: பிரதமர் மோடி இரங்கல்

image

நாட்டின் அறிவியல், கல்விப் பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் என்று குறிப்பிட்டு இஸ்ரோ ex.தலைவர் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை, தன்னலமற்ற சேவையை நாடு என்றும் மறக்காது; இந்திய விண்வெளி அமைப்பை உலக அரங்கில் உயரச் செய்தவர் எனவும் புகழ்ந்த பிரதமர், அன்னாரின் குடும்பத்தினர், விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.

Similar News

News April 26, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,309 விண்ணப்பம் 

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்கள், எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில், அங்கன்வாடி பணியிடங்களுக்கு 2,587 பேரும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 136, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 586 என மொத்தம் 3,309 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.

News April 26, 2025

திமுக-வின் அலட்சியத்தால் உயிரிழப்பு: இபிஎஸ்

image

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

News April 26, 2025

கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!