News April 25, 2025
செல்வம் செழிக்க வைக்கும் பூமாத்தம்மன்

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பொருளாதார சிக்கலில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்
Similar News
News April 26, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,309 விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்கள், எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில், அங்கன்வாடி பணியிடங்களுக்கு 2,587 பேரும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 136, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 586 என மொத்தம் 3,309 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
News April 26, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க