News April 25, 2025
இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.
Similar News
News April 26, 2025
ராகு, கேது பெயர்ச்சி: வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்

இன்று மாலை ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம், துலாம் ராசிக்காரர்கள், வீட்டின் தென்மேற்கு மூலையில், நல்லெண்ணை விளக்கு ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, நாளை காலை 7:30 – 8:30 அல்லது மாலை 4:30 – 6:00 விளக்கு ஏற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.
News April 26, 2025
IPL: PBKS முதலில் பேட்டிங்

இன்றைய ஐபிஎல் போட்டியில் KKR, PBKS அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் முனைப்போடு களம் இறங்குகிறது.
News April 26, 2025
9,970 காலியிடங்கள்… அப்ளை செய்துவிட்டீர்களா?

ரயில்வேயில் துணை ஓட்டுநராக (Assistant Loco Pilot) பணியாற்ற விரும்புகிறீர்களா? இந்த பணிக்கு 9,970 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர SSLC தேர்ச்சி பெற்று, ITI முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் Diploma, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம்: ரூ.19,900. வயது வரம்பு 30. மே.11க்குள் <