News April 25, 2025
ராகு, கேது தோஷம் நீக்கும் தஞ்சை காளஹஸ்தீஸ்வரர் கோயில்

தஞ்சை அருகே கத்திரிநத்தத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்காளஹஸ்தி எனப் போற்றப்படும் இக்கோயில் ஆந்திர, ஸ்ரீ காளஹஸ்திக்கு இணையான ராகு, கேது பரிகார ஸ்தலமாகும். வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை (ஏப்.26) மாலை 4.28க்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். இங்கு சென்று நாகலிங்கப்பூ, வில்வ இலை சாற்றி வழிபட்டால் தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம். பிறருக்கு ஷேர் செய்யவும்
Similar News
News August 20, 2025
ஆட்சியர் தலைமையில் நான் முதல்வன் திட்ட பணிகள் கூட்டம்

ததஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்ட பணிகள் தொடர்பாக முன்திட்டமிடல் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News August 20, 2025
தஞ்சை ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இகூட்டமானது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளாக வளர்த்திடும் தளிர்” திட்ட பணிகள் குறித்து, கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News August 20, 2025
தஞ்சாவூர் மக்களே உஷார்…! ஆன்லைன் லோன் மோசடி!

நமது தஞ்சை மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!