News April 25, 2025
சாகும் வரை காத்திருந்த தீவிரவாதி

தனது கணவரை சுட்டுவிட்டு, அவர் சாகும் வரை காத்திருந்து, பின்னரே தீவிரவாதி அங்கிருந்து சென்றதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ம.பி.யைச் சேர்ந்த சைலேஷின் மனைவி ஷீதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சென்ற பிறகும் கூட தங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ராணுவ வீரரிடம் இது பற்றி சொன்னபோது, ஏன் இங்கு வந்தீர்கள் என அவர் கடிந்து கொண்டதாகவும் ஷீதல் கூறியுள்ளார்.
Similar News
News November 4, 2025
விஜய் கட்சியின் சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவின் சின்னத்தை அறிய பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சின்னத்திற்கு விண்ணப்பிக்க நாளை தவெகவினர் டெல்லி செல்கின்றனர். இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 5 சின்னங்களை விஜய் தேர்வு செய்து வைத்திருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. ஆட்டோ, விசில் சின்னங்கள் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
News November 4, 2025
அழகியே.. அரசியே.. சமந்தா

சுட்டி சமந்தாவின் சேட்டைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. SM-யில் ஆக்டிவா இருக்கும் சமந்தா, இன்ஸ்டாவில் அடிக்கடி அழகான போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸை பார்த்தவுடன், ‘24’ படத்தில் வரும் “மெய் நிகரா” பாடல் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு எந்த பாடல் நினைவுக்கு வந்தது? கமெண்ட் பண்ணுங்க!
News November 4, 2025
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை: மாணவர்கள் குஷி

தேர்தலையொட்டி இந்தாண்டு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறவுள்ளன. அந்த வகையில், மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும். +2 தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவதால், 2 மாதங்களுக்கும் மேல் லீவுதான். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.6-ல் கடைசி தேர்வு நடைபெற இருப்பதால், ஜூன் வரை அவர்களுக்கும் விடுமுறையே. மற்ற வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.


