News April 25, 2025
வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜ் (40) கைது செய்யப்பட்டார். மதுபோதையில், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
பெண்கள் உதவி மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

வடசென்னையில் உள்ள பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதுகாப்பாளர் (ரூ.12,000) மற்றும் பன்முக உதவியலாளர் (ரூ.10,000) பணியிடங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் வரும் மே 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 26, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.