News April 25, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார். 45 ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வயது 63. அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிரபலமான, ‘Friday the 13th’ மற்றும் ‘Knots Landing’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக, நடித்திருப்பது பேய் படங்களிலும், தொடர்களிலும் தான். #RIP.
Similar News
News April 26, 2025
DoYouKnow: ஆணுறையை ஆயுதமாக்கிய இந்திய ராணுவம்

1971 போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதில் எதிரியை வீழ்த்த நம் ராணுவம், ஆணுறைகளை பயன்படுத்தியது உங்களுக்கு தெரியுமா? ஆம், பாக்., போர்க் கப்பல்களை தகர்க்க பயன்படுத்திய கன்னி வெடிகளை ஈரம் பாதிக்காமல் வைக்க, அவற்றை ஆணுறைகளால் கவர் செய்தனர். அதேபோல, வங்கதேச சதுப்புநிலப் பகுதிகளில் துப்பாக்கியின் ‘muzzle’ பகுதியை உலர்வாக வைக்க ஆணுறையால் மூடினர். வல்லவனுக்கு condoms-ம் ஆயுதமே!
News April 26, 2025
தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கூறியது என்ன?

155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?
News April 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 29 – சித்திரை- 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை