News April 25, 2025
பாக். வீரருக்கு அழைப்பு.. நீரஜ் சோப்ரா வருத்தம்

எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
Similar News
News April 26, 2025
பதற்றமா… இது காரணமாக இருக்கலாம்

பழங்கள், காய்கறிகளை குறைவாக சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கனடாவில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறிகள் அல்லது பழங்களாவது இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல் உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும் பதற்றம் வரும் வாய்ப்பு 70% அதிகரிக்கிறது.
News April 26, 2025
CSK-வை வீழ்த்தி SRH அணி வெற்றி

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CSK-வை வீழ்த்தி SRH வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த CSK அணி வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால், அந்த அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எளிய இலக்குடன் களமிறங்கிய SRH அணியும் தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், கடைசி நேரத்தில் நிதிஷ், கமிந்து அதிரடி காட்ட SRH அணி வென்றது.
News April 26, 2025
ராசி பலன்கள் (26.04.2025)

➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – கவலை ➤மிதுனம் – பயம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – களிப்பு ➤கன்னி – தாமதம் ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – சிக்கல் ➤மகரம் – லாபம் ➤கும்பம் – நன்மை ➤மீனம் – சோதனை.