News April 25, 2025

இன்று தோனி நிகழ்த்தபோகும் மாபெரும் ரெக்கார்ட்!

image

CSK-ன் கேப்டன் தோனி, T20 கிரிக்கெட்டில் இன்று தனது 400-வது மேட்ச்சில் விளையாட இருக்கிறார். இதன் மூலம், இந்த சாதனையை செய்யும் 4-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். இப்பட்டியலில், ரோஹித் சர்மா (456), தினேஷ் கார்த்திக் (412) விராட் கோலி (407) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இன்று தோனி CSK-வுக்கு வெற்றியை தேடிக் கொடுப்பாரா?

Similar News

News December 25, 2025

மகாராஷ்டிரா EX அமைச்சர் காலமானார்

image

EX அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுருப்சிங் நாயக்(88) உடல்நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 1978 முதல் தொடர்ச்சியாக 8 முறை நவாப்பூர் தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். ‘பழங்குடியினரின் சேவகன்’ என சுருப்சிங்கிற்கு Ex PM இந்திரா காந்தி புகழாரம் சூட்டியிருக்கிறார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், மகாராஷ்டிரா DCM அஜித் பவார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

News December 25, 2025

₹20 செலுத்தினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

image

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்‌ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.

News December 25, 2025

புது ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. NEW UPDATE

image

பொங்கல் பரிசு தொகுப்பை அரசு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, புதிய கார்டுகள் பிரிண்ட் நிலையில் உள்ளதாக கூறினர். TN அரசு பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்னரே, புதிய கார்டுகள் ஆக்டிவ் நிலையிலிருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

error: Content is protected !!