News April 25, 2025

விழுப்புரம் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04146-240602, திண்டிவனம்- 04147 – 228503, கோட்டக்குப்பம்- 0413-2236150. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

Similar News

News September 18, 2025

பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் படி நடப்பாண்டு மாவட்டம் முழுவதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதால், தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன் கிரையம் செய்த நில உரிமையாளர்கள் பயன்பெறலாம்.

News September 18, 2025

விழுப்புரம் இளைஞர்களே இதோ வேலை வாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை செப். 19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள போட்டி

image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நேற்று(செப்.17) நடந்தது. இதில் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

error: Content is protected !!