News April 25, 2025

திருவள்ளூரில் சாலை விழிப்புணர்வு பூங்கா

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3.99 கோடி ரூபாயில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் படிப்பகம் அமைக்கப்படுகிறது. 2.29 கோடியில் பூங்கா, 1.70 கோடியில் படிப்பகம் உருவாகும். இதில் செயற்கை குளங்கள், அடர்வனம், நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் உபகரணங்கள், வாசிப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (14/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 14, 2025

திருவள்ளூர்: யாருக்கும் தெரியாத போட்டோ சூட் ஸ்பாட்

image

திருவள்ளூருக்கு அருகில் ஆரமில்லாத சுற்றுலா தலமாக உள்ளது நெட்டுக்குப்பம் கடற்கரை.ஒரு கான்கிரீட் தூண் கடற்கரையிலிருந்து கடலுக்கு நீண்டுள்ளது. இது பொதுவாக உள்ளூர் மக்களால் ‘உடைந்த பாலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு சிற்றோடை முகத்துவாரத்தில் தூர்வாரும் இயந்திரம் அமைக்க கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு போட்டோ சூட் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

திருவள்ளூர் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 122 அரசு டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை மண்டல பொது மேலாளரிடம் ஒப்படைக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்துள்ளனர். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவாததால் பாதுகாப்பு கருதி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து 122 கடைகளுக்கும் பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!