News April 25, 2025
தங்கம் விலை இன்று உயர்வா? சரிவா?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றும், நேற்று முன்தினமும் குறைந்து வந்தது. இதன்படி, 1 கிராம் தங்கம் நேற்று ரூ.9,005ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.72,040ஆகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதன் விலை அதிகரிக்கவோ, குறையவோ இல்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. 1 கிராம் ரூ.111, 1 கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. SHARE IT.
Similar News
News April 25, 2025
SRH-க்கு 155 ரன்கள் இலக்கு

SRH-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த CSK, 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆயுஷ் மாத்ரே (30), டெவால்ட் பிரெவிஸ் (42) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினர். ரஷீத், தோனி, துபே உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். SRH அணியின் பேட்டிங் லைன் அப் வலுவாக இருப்பதால், இந்த இலக்கு போதுமானதாக இல்லை. பேட்டிங்கில் சொதப்பிய CSK, பவுலிங்கில் ஜொலிக்குமான்னு பார்ப்போம்.
News April 25, 2025
டிடிவி தினகரன் மீதான வழக்கு ரத்து

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. அதிமுக முன்னாள் MP உதயகுமார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக MP தங்க தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
News April 25, 2025
டான்செட் – சீட்டா தேர்வு முடிவுகள் வெளியானது

டான்செட் – சீட்டா ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை <