News April 25, 2025

பெரம்பலூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ <>இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

Similar News

News November 12, 2025

பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 12, 2025

பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் ஐ.ஜி நேரில் ஆய்வு

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், தனிப்பிரிவு, குற்ற ஆவணக்கூடம் உள்ளிட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பதிவேடுகளைச் சரிபார்த்தார். ஆய்வின்போது, பணியை மேம்படுத்துவது குறித்து காவலர்களுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் சக்கர நாற்காளிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

error: Content is protected !!