News April 25, 2025

தூத்துக்குடி: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *தூத்துக்குடி மக்களே மறக்காமல் அப்பளை பண்ணுங்க*

Similar News

News November 5, 2025

தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொடூரக் கொலை

image

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குலசேகரப்பட்டினம் தர்காவிற்கு சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அவர் குலசேகரபட்டினம் தர்கா அருகே கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

தூத்துக்குடி: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)

2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)

3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)

4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)

5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 4, 2025

தூத்துக்குடி: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

image

கடந்த செப்டம்பர் மாதம் வல்லநாடு அருகே பொது சொத்தை சேதப்படுத்தியதாக பாறை கூட்டத்தைச் சேர்ந்த இசக்கி துரை என்பவரை வல்லநாடு போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில் இசக்கி துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இசக்கி துரையை வல்லநாடு போலீசார் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!