News April 25, 2025
ஆன்லைனில் பேண்ட் வாங்கியவருக்கு சர்ப்ரைஸ்!

டெல்லியை சேர்ந்த ஒருவர், Zepto-வில் ட்ராக் பேண்ட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆர்டர் அவரை வந்து சேர, ஆசையாக பிரித்து பார்த்தவருக்கு பேண்ட் பாக்கெட்டில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில், ₹10-ம், ஜெய்ப்பூர் பஸ் டிக்கெட் ஒன்றும் இருந்துள்ளது. இதுகுறித்து, அவர் சோஷியல் மீடியாவில் பகிர, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ‘₹10-க்கு சோப்பு வாங்கி, துணியை துவைச்சி போட்டுக்கோங்க’ என கமெண்ட் பறக்கிறது.
Similar News
News April 26, 2025
தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கூறியது என்ன?

155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?
News April 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 29 – சித்திரை- 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை
News April 26, 2025
சுப்ரீம் கோர்ட் கதவை தட்டிய டாஸ்மாக்

டாஸ்மாக் அலுவலகத்தில் ED சோதனை நடத்தலாம் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. கடந்த மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்ட் நடத்திய ED, ₹1000 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. அதனை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சோதனை நடத்தியதில் தவறில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.