News April 25, 2025
காட்பாடி ரயிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையம் வந்தது. காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ரயில் பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் 15 பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 26, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்.25) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 25, 2025
வேலூரில் பிறந்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

▶️ நெல்சன் திலீப்குமார், திரைப்பட இயக்குனர்
▶️ விஷ்ணு விஷால், திரைப்பட நடிகர்
▶️ அட்டகத்தி தினேஷ், திரைப்பட நடிகர்
▶️ வாணி ஜெய்ராம், பின்னணிப் பாடகி (19 மொழிகள்)
▶️ ராதிகா ஆப்தே, திரைப்பட நடிகை
▶️ இந்துஜா ரவிச்சந்தர், திரைப்பட நடிகை
▶️ துரைமுருகன், தமிழக அமைச்சர்
▶️ சதீஷ் சிவலிங்கம், இந்திய பளுதூக்கும் வீரர்
▶️ பழனி அமர்நாத், கிரிக்கெட் வீரர்
உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் கமெண்ட் செய்யுங்கள். ஷேர்
News April 25, 2025
மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

கே.வி. குப்பம் திருமணியை சேர்ந்தவர் மேஸ்திரி ஆதிகேசவன். இவரது மனைவி ரம்யா (25). இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். நேற்று வீட்டில் ரம்யா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீது அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரம்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.