News April 25, 2025
ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <
Similar News
News October 24, 2025
கோவை கலெக்டர் அதிரடி உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் தனியார், மத அமைப்புகள் நடத்தும் முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை வழிகாட்டுதலின்படி பதிவு செய்ய வேண்டும். அரசு விதிகளை பின்பற்றாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 24, 2025
கோவை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கோவை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
News October 24, 2025
காந்திபுரத்தில் மாணவி பலி: டிரைவர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிணி(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த நிலையில் மாணவி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் வந்துள்ளார். அப்போது, தாறுமாறாக அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் பலியானார். இச்சம்பவத்தில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுங்கம் கிளை-2 ஐ சேர்ந்த டிரைவர் மார்ட்டின் சஸ்பெண்ட் நேற்று செய்யப்பட்டுள்ளார்.


