News April 4, 2024
ஓடாய் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்காது

3 ஆண்டுகால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். காரமடை பிரசாரத்தில் பேசிய அவர், திமுகவில் ஓடாய் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்காது. அங்கு வாரிசு அரசியலுக்கே முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டினார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தற்போது அதனை ரத்து செய்துவிடுவோம் என பொய் பேசி வருவதாக கடுமையாக சாடினார்.
Similar News
News January 14, 2026
பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

போகி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே பள்ளிகளுக்கு இன்று (ஜன.14) கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லத் தயாராகிவிட்டனர்.
News January 14, 2026
சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு ரெடியான திமுக

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வரும் 19-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிப்.4, 5-ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் துறை சார்ந்த குழுக்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களின் குரலாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்றும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 14, 2026
சபரிமலையில் இன்று மகரஜோதி!

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அங்கே தங்கியுள்ளனர். மகரஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்குள் 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


