News April 25, 2025
செங்கல்பட்டில் 6 புதிய தடங்களில் மினி பஸ் இயக்கம்: அரசு ஆணை

செங்கல்பட்டில் மூன்றாம் கட்டமாக 6 புதிய தடங்களில் மினி பஸ்கள் இயக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழித்தடங்கள் விவரம் 1. மாம்பாக்கம் – காயார், 2. மதுராந்தகம் – காட்டுக்கரணை, 3. கல்யாங்குளம் – மேல்மருவத்துார், 4. தாம்பரம் மெப்ஸ் – டி.டி.கே., நகர், 5. சோழிங்கநல்லுார் – மாம்பாக்கம், 6. மண்ணிவாக்கம் காவல் நிலையம் – டி.எம்.ஜி., கல்லுாரி. பேருந்தில் செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 26, 2025
குழந்தை வரம் தரும் செங்கல்பட்டு முருகன்

செங்கல்பட்டு அச்சிறுபாக்கத்தில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே
News April 25, 2025
செங்கல்பட்டில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் செங்கல்பட்டு – 044-27432101, தாம்பரம் – 044-24493663, மேல்மருவத்தூர் – 044-27529100, மாமல்லபுரம் – 044-27529100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.