News April 25, 2025

கோர விபத்தல் ஒருவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இன்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 14, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! வங்கியில் வேலை

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 5180 ஜூனியர் அசோசியேட் (கிளர்க்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 380 காலி இடங்கள் உள்ளன. ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20-28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு மொத்தம் 14 இடங்களில் நடைபெறும். கடைசி நாள்: ஆகஸ்ட் 26. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யவும். ஷேர்!

News August 14, 2025

கள்ளக்குறிச்சியில் மூடப்படும் அரசு பள்ளியின் பட்டியல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் 6 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கல்வராயன்மலையில் உள்ள விளாநெல்லி, வேதுார் அரசு துவக்கப் பள்ளி, மேல்பரிகம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள மேட்டுக்குப்பம், ரெட்டியார்பாளையம் அரசுப் பள்ளிகள், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கூத்தனுார் தாங்கல் அரசு துவக்கப் பள்ளி ஆகியவை இதில் அடங்கும்.

News August 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(13.8.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.

error: Content is protected !!