News April 25, 2025
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

மார்ச் 2024-ல் ₹2 குறைந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரை ₹100.80, ₹92.39 என்றே தொடர்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $70-க்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், எரிபொருள்களின் விலை குறையாததற்கு இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகரிப்பதும் காரணமாக உள்ள நிலையில், உள்நாட்டு வரிகள், கமிஷன்கள், தேவைகள் ஆகியவையும் காரணிகளாக உள்ளன. எப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை குறையுமோ?
Similar News
News September 18, 2025
கடலூர்: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

▶️ குடிநீர் பிரச்சனை – 1800 425 1941
▶️ பெண்கள் பாதுகாப்பு – 1091
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 18, 2025
கையில் Bitcoin.. 12 அடிக்கு டிரம்ப்பின் சிலை!

கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் US அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முதலீட்டாளர்கள் 12 அடி உயர சிலை அமைத்துள்ளனர். வாஷிங்டன் DC-யில் அமைந்துள்ள அமெரிக்க கேபிடல் கட்டடத்திற்கு வெளியே அமைந்துள்ள இந்த சிலையில், டிரம்ப் தனது கையில் Bitcoin-ஐ ஏந்தியுள்ளார். வெள்ளி மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 18, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹50 குறைந்து ₹10,220-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை, மீண்டும் குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.