News April 25, 2025
திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம் கரூர் வரை இயங்கும்

சேலம் கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
Similar News
News April 25, 2025
கரூரில் ’மயோனைஸ்’ ஆய்வு தீவிரம்!

பதப்படுத்தப்படாத முட்டையிலிருந்து (பச்சை முட்டை) மயோனைஸ் தயாரிக்கப்பட்டு உண்பதால், இரைப்பை மற்றும் குடல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 08-04-2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் நாட்களில் கரூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணியில் ஈடுபட கரூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
News April 25, 2025
கரூர்: இரிடியம் மோசடி செய்த 6 பேர் கைது !

கரூர் பசுபதிபாளையத்தில் ’சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல் இருடியம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குமரேசன், பொன்னரசன், ஹரிஷ், தியாகராஜன், சுரேஷ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம் கெமிக்கல்கள் கார் செல்போன்களை பறிமுதல் செய்து, இன்று(ஏப்.25) சிறையில் அடைத்தனர்.
News April 25, 2025
ஆரம்பமாகிறது தமிழக அரசின் இலவச பயிற்சி

தமிழக அரசின் விளையாட்டு துறை சார்பாக கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று 25.4.25 முதல் 15.5.25 வரை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு மட்டுமே கலந்து கொள்ள முடியும். கரூர் மாவட்ட கேலோ இந்தியா ஜூடோ பயிற்சியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.